நடிகை கஸ்தூரி கோஷத்தால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு | Actress kasthuri | Remanded in judicial custo
நீதிபதி உத்தரவுக்கு முன் கஸ்தூரி வைத்த கோரிக்கை கோர்ட்டில் நடந்தது என்ன பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னையில் கடந்த 3ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய நடிகை கஸ்துாரி, தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து சொன்ன கருத்து சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தெலுங்கு மக்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. என் பேச்சை திரும்ப பெறுகிறேன் என்று கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மீது வெவ்வேறு இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தெலுங்கு அமைப்புகளை சேர்ந்தோர் அளித்த புகாரில், சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். கஸ்தூரியை கைது செய்ய தேடியபோது தலைமறைவாகினார். கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துாரியை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்ட அவர், இன்று எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.