உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெண் ஐபிஸ் அதிகாரியின் பரபரப்பு புகார் பின்னணி! | ADGP Kalpana Nayak | TN Police | IPS

பெண் ஐபிஸ் அதிகாரியின் பரபரப்பு புகார் பின்னணி! | ADGP Kalpana Nayak | TN Police | IPS

தீ வைத்து என் கதையை முடிக்க சதி! கூடுதல் டிஜிபிக்கு நடந்தது என்ன? ஆந்திராவை சேர்ந்தவர் கல்பனா நாயக். ஐபிஎஸ் அதிகாரியான இவர் இப்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக பணியாற்றினார். இந்த சூழலில் சென்ற ஆண்டு ஜூலை 28ல், கல்பனா நாயக் அறையில், மின் கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்து நடப்பதற்கு முன் 2023ல் சென்னை ஐகோர்ட் விசாரித்து வரும் வழக்கில் கல்பனா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். போலீஸ், தீயணைப்பு துறைகளுக்கு எஸ்.ஐ மற்றும் நிலைய அலுவலர் என 750 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் குளறுபடி நடந்ததாக அந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மதிப்பெண்கள் பெற்று தகுதி இருந்தும், இட ஒதுக்கீடுகளில் சேர வேண்டியவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது என கல்பனா அம்பலப்படுத்தி இருந்தார். இதுபற்றி உள்துறை மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கும் புகார் தெரிவித்திருந்தார். இந்த சமயத்தில் தான் அவரது அறையில் தீ விபத்து நடந்தது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விபத்து நடந்த மறுநாளே, டிஜிபி சங்கர் ஜிவாலை சந்தித்து இதை விவரித்து உள்ளார். அதன்பின் 2024 ஆகஸ்ட்டில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் வாயிலாக புகார் அனுப்பி உள்ளார்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி