வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆதவ் இப்போ திருமாவை கையாளட்டும் , அதைவிடுத்து சொதப்புவது எப்படி என்று பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறாரா
பொதுக்குழுவில் ஆதவ் பேச்சால் தவெகவினர் இடையே சலசலப்பு Tvk| actor Vijay| adhav arjuna|
தவெகவுடன் கூட்டணி அமைக்க, எந்த கட்சியும் முன்வராத நிலையில் ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்கான முயற்சிகளிலும், விஜய் இறங்கியுள்ளார். விவசாயிகள், துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, தனது சினிமா வட்டத்தில் உள்ள நண்பர்களுடன், அவர் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக, அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை கைப்பற்ற விஜய் விரும்புகிறார். இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, நடிகர் அஜித் தன் கருத்தை கூறியிருந்தார். கரூர் சம்பவத்திற்கு தனி மனிதருடைய தவறு மட்டும் காரணமல்ல; அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது; செல்வாக்கை காட்ட கூட்டம் கூட்டுவதை நிறுத்த வேண்டும் என, அவர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க., சிறப்பு பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பேசினார். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள், இதுபோன்று விஜய்க்கு எதிராக கருத்து சொல்ல கிளம்பியுள்ளனர் என, அஜித்தை மறைமுகமாக விமர்சித்தார். இதற்கு விளக்கம் அளித்து பேசிய அஜித், என் பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயல்கின்றனர். விஜய்க்கு நல்லதை மட்டுமே நினைத்திருக்கிறேன்; அவருடைய முயற்சியை வாழ்த்தி இருக்கிறேன் என, கூறியுள்ளார். தவெகவின் ஓட்டு வங்கியை அதிகரிக்கும் வகையில் விஜய் காய் நகர்த்தி வரும் வேளையில், கட்சியின் ஒட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் வகையில், ஆதவ் அர்ஜுனா பேசியது சரியல்ல என கட்சியினர் புலம்புகின்றனர்.
ஆதவ் இப்போ திருமாவை கையாளட்டும் , அதைவிடுத்து சொதப்புவது எப்படி என்று பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறாரா