உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / TVK பக்கமே போய் இருக்கமாட்டேன்... இடிந்துபோன KAS | ADMK AMMK alliance | NDA | EPS vs Sengottaiyan

TVK பக்கமே போய் இருக்கமாட்டேன்... இடிந்துபோன KAS | ADMK AMMK alliance | NDA | EPS vs Sengottaiyan

இப்போது பழனிசாமி செய்திருப்பதை தான், அப்போது நான் செய்யச் சொன்னேன். ஆனால், என்னை வெளியே அனுப்பி விட்டார்களே என்று, தன் ஆதரவாளர்களிடம் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புலம்பித் தள்ளுகிறாராம். இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கூறியது: அதிமுக வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால், மனமாச்சரியங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியவரே செங்கோட்டையன் தான். பின்னர் அவரது தலைமையில் 6 முன்னாள் அமைச்சர்கள், 2025 ஜூலை மாதம் பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசினர். ஆனால் அந்த கருத்தை பழனிசாமி ஏற்கவில்லை. தன் எண்ணத்துக்கு எதிராக செயல்படுவதாக செங்கோட்டையன் மீது பழனிசாமி கோபம் அடைந்தார். அதன் பிறகு செங்கோட்டையனுக்கு தன் உறவினர்கள் மூலம் நெருக்கடி கொடுக்க துவங்கினார். பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் சென்றதோடு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்டி செங்கோட்டையனை கட்சியில் இருந்தும் நீக்கினார் பழனிசாமி. #TVKvsKAS #ADMKAMMKAlliance #EPSvsSengottaiyan #TamilPolitics #Election2026 #PolitcalDebate #IndiaPolitics #DMK #PoliticalAlliances #PublicOpinion #VoterAwareness #ElectionCoverage #PoliticalAnalysis #TamilNaduElections #Campaign2026 #ElectoralStrategies #VoteSttats #PoliticalBuzz

ஜன 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ