/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சொந்த கட்சியிலும் டிஸ்யூம் வெளியேறியவர்களும் காத்திருப்பு | ADMK | Munusami | ADMK Candidate | 2026
சொந்த கட்சியிலும் டிஸ்யூம் வெளியேறியவர்களும் காத்திருப்பு | ADMK | Munusami | ADMK Candidate | 2026
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார், அதிமுக துணை பொதுச்செயலர் முனுசாமி. ஆரம்பத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் என தன்னை காட்டிக்கொண்டு சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்தார். பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்தபின், பழனிசாமி ஆதரவாளராக மாறினார். கட்சியில் இருந்து செங்கோட்டையன் வெளியேறிய பிறகும் அவருக்கு எதிராக பேசுகிறார். கட்சியினரை விட தன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பாமகவினராக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார். இப்படி சொந்த கட்சியினரே முனுசாமி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
மார் 26, 2026