உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக மா.செக்களுக்கு ஸ்ட்ரிக்டாக போடப்பட்ட உத்தரவு | ADMK | EPS

அதிமுக மா.செக்களுக்கு ஸ்ட்ரிக்டாக போடப்பட்ட உத்தரவு | ADMK | EPS

அ.தி.மு.க மாவட்டச் செயலர்கள், மாவட்டப் பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. கட்சி ரீதியான 42 மாவட்டச் செயலர்கள், 42 மாவட்டப் பொறுப்பாளர்கள் என 84 பேருடன் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து, நிர்வாகிகளின் செயல்பாடுகள், பூத் கமிட்டி விபரம் குறித்து கேட்டார். தொகுதிகளின் நிலவரம், பா.ஜ.,வின் பலம் தொடர்பாக, பழனிசாமி கேள்விகள் கேட்டுள்ளார். அதற்கான விளக்கத்தையும் பெற்றுள்ளார். பின்னர் நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பாக சில அறிவுரைகள் கூறி இருக்கிறார். பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, வரும் ஜூன் இறுதிக்குள் முடித்து, அதன் விபரங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும். இதில் எந்த தாமதமும் கூடாது. தங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெறுவதே, மாவட்டச் செயலர்கள் இலக்காக இருக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை முழுநேரமாக கட்சி பணியாற்ற வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளையும் பணியாற்ற வைக்க வேண்டும் என பழனிசாமி கூறினார். இதையடுத்து முக்கியமான விஷயம் என்று சொல்லி, குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அனைத்து மாவட்டச் செயலர்களும் பின்பற்ற வேண்டும் என பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.,வினர் அராஜகம் குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் முழுமையாக சேகரியுங்கள். அதை கட்சித் தலைமைக்கு அனுப்பி வையுங்கள். தகவல்களை முழுமையாக பார்த்துவிட்டு, தலைமை என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி செய்யுங்கள். பெரிய பிரச்னை என்றால், அதை தலைமையே முடிவெடுத்து போராட்டம் அறிவிக்கும். லோக்கல் பிரச்னை என்றால், நீங்களே முடிவெடுத்து லோக்கலில் போராட்டம் அறிவித்து, ஒவ்வொரு பிரச்னைக்கும் மக்கள் கவனம் ஈர்க்க வேண்டும். இதை, தேர்தல் நெருங்கும் வரை விடாமல் தொய்வின்றி செய்ய வேண்டும் என பழனிசாமி கேட்டுக் கொண்டதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறினர்.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி