கூட்டத்தில் பிரச்னை செய்த நபர் குறித்து செங்கோட்டையன் விளக்கம் | ADMK Meeting | Clash in Meeting
ஈரோடு அதிமுக கூட்டத்தில் மோதல் மாஜி அமைச்சருடன் வாக்குவாதம் மேடையில் நடந்த களேபரம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமு செயல்வீரர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலை திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், எம்எல்ஏக்கள் பண்ணாரி, செல்வராஜ் நிர்வாகிகள், பேரூர், நகர, வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செங்கோட்டையன் பேசி முடித்தபோது, கூட்டத்தில் இருந்த அந்தியூரைச் சேர்ந்த ஒருவர் திடீரென மேடைக்கு சென்றார். அதிமுக சார்பில் நடக்கும் எந்த கூட்டத்துக்கும் அழைப்பு வருவதில்லை செங்கோட்டையனிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அவரை தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருதரப்பு மோதலாக மாறியது. அங்கிருந்த சேர்கள் தூக்கி வீசப்பட்டன. உடனடியாக கேள்வி கேட்ட அந்த நபர் வெளியேற்றப்பட்டார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டத்தில் பிரச்சனை செய்த நபருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.