/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக கவுன்சிலரின் கணவருக்கு போலீசார் வலைவீச்சு | ADMK ward secretary | DMK counsillor's husband |
திமுக கவுன்சிலரின் கணவருக்கு போலீசார் வலைவீச்சு | ADMK ward secretary | DMK counsillor's husband |
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 7வது வார்டு திமுக கவுன்சிலர் சித்ரா. இவரை எதிர்த்து போட்டியிட்ட அதே வார்டு அதிமுக செயலாளர் ரமேஷின் மனைவி தோற்றதில் இருந்து இரு தரப்புக்கும் மோதல் உருவானது. கவுன்சிலர் சித்ராவின் கணவர் சக்திக்கும், ரமேஷூக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட்டது. கட்சி வளர்ச்சி பணிகளிலும் பிரச்சனை செய்து கொண்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தனியாக பைக்கில் வந்த ரமேஷை, கீழப்பாலம் மாரியம்மன் கோவில் தெரு அருகே வழிமறித்த 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
நவ 04, 2024