உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தெற்கு தொகுதிகளில் செல்வாக்கை நிலைநிறுத்த துடிக்கும் பாஜ, அதிமுக | ADMK | BJP | Election 2026

தெற்கு தொகுதிகளில் செல்வாக்கை நிலைநிறுத்த துடிக்கும் பாஜ, அதிமுக | ADMK | BJP | Election 2026

தென் மாவட்டங்களில், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் அதிமுகவும், பாஜவும் உறுதியாக இருப்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து, பாஜ வட்டாரங்கள் கூறும்போது, 2024 லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்ட தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்தது. அங்கு பாஜ வளர்ந்து வருவதே, இதற்கு காரணம். முக்குலத்தோர், நாடார், தேவேந்திர குல வேளாளர் ஆகிய சமூகத்தினர் பாஜ பக்கம் வந்து விட்டனர். அவர்களை தக்கவைத்து, 2029 லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றி பெற, பாஜ டில்லி மேலிடம் திட்டமிடுகிறது.

ஜன 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை