கருணாநிதி பெயர் வைக்க ஸ்டாலின் இதை செய்யலாம் | Edappadi Palaniswami | Mk stalin CM | Karunanidhi
கருணாநிதி பெயரில் பயன்படாத திட்டங்கள் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக திமுக அரசு, நிதி ஒதுக்கீடு செய்யாததால், கிடப்பில் போடப்பட்டு உள்ளன. விழுப்புரத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம், மின்பிடி துறைமுக திட்டம், ஜெயலலிதா பல்கலைக்கழகம், காவிரி குறுக்கே ஆதனூர்-குமாரமங்கலம் தடுப்பணை, நஞ்சை-புகளூர் கதவணையுடன் தடுப்பணை, அத்திக்கடவு- அவிநாசி திட்டம், தலைவாசல் கால்நடை பூங்கா, தென்காசி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய், திருநெல்வேலி இரட்டைகுளம் கால்வாய், மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி என மக்களுக்கு பயன்படும் பல திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள திமுக அரசு அத்தியாவசியம் இல்லாத செலவுகளை செய்கிறது. மக்களுக்கு சிறிதும் பயன்தராத கார் ரேஸ் நடத்தப்பட்டது. கருணாநிதி பெயரில் அவசியம் இல்லாத பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.