உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக தோல்வி ஏன்? இபிஎஸ்க்கு வழங்கபட்ட புள்ளி விவரம் | ADMK | Palanisamy | OPS | LokSabha 2024

அதிமுக தோல்வி ஏன்? இபிஎஸ்க்கு வழங்கபட்ட புள்ளி விவரம் | ADMK | Palanisamy | OPS | LokSabha 2024

பிரிந்து கிடக்கும் கட்சியினர் ஒன்று சேர வேண்டும் என்ற கோஷம் தமிழகம் முழுதும் அதிமுகவில் தலை தூக்கி இருக்கிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக, முஸ்லிம் இயக்கத்தோடு கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தாலும், அக்கட்சிகளுக்கு இருக்கும் பலத்தை வைத்து பார்க்கும்போது, அதிமுக தனித்து போட்டியிட்டதாகவேதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவினர் கூறுகின்றனர். அந்த சிறு கட்சிகள் வாங்கிய ஓட்டுக்களில் பெரும்பகுதி அதிமுகவை சேர்ந்தவை என்றும் குறிப்பிடுகின்றனர். கட்சி பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுக தனித்து போட்டியிட்டால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் என அக்கட்சிக்குள்ளேயே பெரும் பொருமல் இருந்தது. அதை லேசுபாசாக பழனிசாமியிடம் கட்சியின் மூத்த முன்னோடிகள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அதை ஏற்க அவர் தயாராக இல்லை என்றதும், அமைதியாகி விட்டனர். எதிர்பார்த்தது போலவே தேர்தல் முடிவுகள் வந்ததால், அடுத்து கட்சியின் நிலை என்னாகும்? என்ற கவலை கட்சியினருக்கு ஏற்பட்டது. தேர்தல் முடிவுகளை திரும்பத் திரும்ப புரட்டி, கட்சி எந்த நிலைக்கு இருக்கிறது என்பதை புள்ளி விபரங்களுடன் திரட்டியிருக்கும் மூத்த முன்னோடிகள், அதை பழனிசாமியிடம் இரு நாட்களுக்கு முன் கொடுத்திருப்பதாக தெரிகிறது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ