/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒருநாள் மழைக்கு தாங்காத அதிமுக 126 அடி கொடி கம்பம் | AIADMK flagpole fallen | Ulundurpet
ஒருநாள் மழைக்கு தாங்காத அதிமுக 126 அடி கொடி கம்பம் | AIADMK flagpole fallen | Ulundurpet
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடியற்காலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. கனமழையின்போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. உளுந்தூர்பேட்டையில் உள்ள புறவழிச்சாலை பகுதியில் அதிமுக சார்பில் நிறுவப்பட்ட 126 அடி அதிமுக கொடி கம்பம் முறிந்து பக்கத்தில் உள்ள மைதானத்தில் விழுந்தது.
அக் 04, 2025