பாகிஸ்தானை அலறவிட்ட ‛ஸ்பை' அஜித் தோவல் கதை | ind vs pak | ajit doval spy story | pak nuke secrets
நம் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த பதவிகளில் முக்கியமான ஒன்று NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி. பிரதமர் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய முக்கிய வேலை இந்த பதவியில் இருப்பவருக்கு உண்டு. என்எஸ்ஏ பதவி மத்திய அமைச்சர் ரோலுக்கு நிகரான பதவி. நாட்டிலேயே மிகவும் உயர்வான 7-வது பதவி இதுதான். இவ்வளவு முக்கியமான பதவியை 2014 முதல் அஜித் தோவல் வகித்து வருகிறார். அடிப்படையில் இவர் ஐபிஎஸ் அதிகாரி. 1968 முதல் பல இடங்களில் பணியாற்றினார். 2005ல் ஓய்வு பெற்றார். புலனாய்வு மற்றும் உளவு பணியில் இவரை போல் இன்னொரு அதிகாரியை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவு விவேகத்துடன் செயல்பட்டு வந்தார். இதனால் தான் அஜித் தோவலை ‛சூப்பர் போலீஸ் என்று சொல்கின்றனர். அவரது திறமையை கருத்தில் கொண்டு தான், 2014 முதல் இப்போது வரை தொடர்ந்து அவரையே நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.