ராகுலின் யாத்திரை: பீகாரில் அகிலேஷ் யாதவ் Rahul at Bihar| RJD| Akilesh Yadav | Akilesh with Rahul|
மத்திய பாஜ அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு எதிராக, லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் நடத்தும் வாக்காளர் உரிமை யாத்திரை பீகாரின் சரண் மாவட்டத்தில் இன்று நடந்தது. பீகார் வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருந்துஇன்னொரு இடத்துக்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், இறந்தாேர், இரட்டை பதிவு என்ற அடிப்படையில், 65 லட்சம் பேரின் பெயர்களை தேர்தல் கமிஷன் நீக்கியது. ஆனால், நீக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் உயிருடன் உள்ளனர். அதே முகவரியில் வசிக்கின்றனர் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி, அமித் ஷா, தேர்தல் கமிஷன், பாஜ தலைவர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் சரமாரியாக குற்றம்சாட்டி வரும் ராகுல், இன்று தன் யாத்திரையை சரண் தொகுதியில் மேற்கொண்டார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உபி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று ராகுலின் பேரணியில் பங்கேற்றார். இன்றைய பேரணியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: ராகுல் நடத்தும் யாத்திரையை, காங்கிரஸ், ஆர்ஜேடி தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பீகார் மக்களும் வெற்றி பெறச் செய்துள்ளனர். இதே ஒற்றுமை தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சி செய்யும் பாஜவை பீகாரை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் நடுநிலைத்தன்மை இழந்துவிட்டது. அது ஒரு சார்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாஜ போடும் கட்டளைகளுக்கு வளைந்து கொடுக்கும் அமைப்பாக மாறிவிட்டது. ராகுலின் இந்த யாத்திரையை நான் ஆதரிக்கிறேன் என அகிலேஷ் யாதவ் கூறினார். பீகாரின் 20 மாவட்டங்களில் 1300 கிமீ ராகுல் மேற்கொள்ளும் பேரணி யாத்திரை, வரும் செப். 1ம் தேதி பாட்னாவில் நிறைவடைகிறது. அன்றைய தினம், இண்டி கூட்டணித் தலைவர்கள் பலரும் ஒரே மேடையில் ஏறி பேசவுள்ளனர். #AkileshYadavWithRahul| #VoterAdhikaarYatra| #RahulRally| #BiharEelction| #RJD #Congress #Samajwadi|