/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்திய ராணுவம் வென்ற இடத்தை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது யார்? அமித் ஷா ஆவேசம் | Amit Shah
இந்திய ராணுவம் வென்ற இடத்தை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது யார்? அமித் ஷா ஆவேசம் | Amit Shah
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை பற்றிய விவாதம் லோக்சபாவில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். எதிர்க்கட்சியினர் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றைய விவாதத்தின் போது பல கேள்விகளை எழுப்பினர். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில், பாகிஸ்தானுடன் ஏன் தொடர்ந்து யுத்தம் செய்யவில்லை என கேட்டனர். யுத்தத்தின் பின் விளைவுகள் அதிகம். எதையும் யோசித்து தான் செய்ய வேண்டும். நான் ஒரு வரலாற்று மாணவன். அதனால், எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு வரலாற்று ரீதியாக பதில் அளிக்க விரும்புகிறேன்.
ஜூலை 29, 2025