இந்துக்கள் பற்றி ராகுல் பேசியதால் அமித்ஷா ஆவேசம் | Amit Shah demanded apology from Rahul
இந்துக்கள் வன்முறையாளர்களா ராகுலை வறுத்த அமித்ஷா அனல் பறக்கும் பேச்சு எதிர்கட்சி தலைவராக ராகுலின் முதல் பேச்சே லோக்சபாவில் புயலை கிளப்பியது. இந்து கடவுளான சிவன் உட்பட அனைத்து மத கடவுள் படத்தையும் காட்டி ராகுல் பேசினார். அனைத்து கடவுளும் அகிம்சையை போதிக்கின்றனர்; யாரையும் பயமுறுத்தாதே; யாருக்கும் பயப்படாதே என்று மதங்கள் சொல்கின்றன. ஆனால் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, பொய் பற்றி மட்டுமே பேசுகின்றனர். நீங்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல என்று பாஜவினரை குறி வைத்து ராகுல் பேசினார். இதற்கு பாஜ எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுலுக்கு எதிராக கோஷம் போட்டனர். ராகுல் பேசியதை அடிக்கோடிட்டு அமித்ஷா பதிலடி கொடுத்தார்