உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமித்ஷா என்ட்ரி-உடையுமா 5 அரசியல் மர்மம் Amit Shah tamil nadu visit | Annamalai | tn election 2026

அமித்ஷா என்ட்ரி-உடையுமா 5 அரசியல் மர்மம் Amit Shah tamil nadu visit | Annamalai | tn election 2026

டில்லியில் அமித்ஷா-பழனிசாமி சந்திப்பு நடந்த அந்த கணமே, 2026 தேர்தலுக்கான தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்பு வரை இருந்த அரசியல் சூழ்நிலையை டோட்டலாக மாற்றிப்போட்டது இந்த சந்திப்பு. எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் எல்லாம் திமுகவின் சக்தி வாய்ந்த கூட்டணிக்கு எதிராக ஓரணியில் திரளும் வாய்ப்பு உருவானது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ என்று திமுக உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அமித்ஷா தமிழகம் வருகிறார் என்ற அறிவிப்பு பரபரப்பை எகிற வைத்துள்ளது. 2026 தமிழக தேர்தலுக்கான அமித்ஷாவின் முதல் வருகை என்பதால் நிறையவே எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர், நாளை இரவு சென்னை வருகிறார்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை