உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு - அம்மன் அர்ஜுனன் | Amman Arjunan | Admk MLA | Anti corruption Raid

காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு - அம்மன் அர்ஜுனன் | Amman Arjunan | Admk MLA | Anti corruption Raid

இது நான் அப்போவே எதிர்பார்த்தது தான்! அதிமுக எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே அர்ஜுனன். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வாகவும் இருந்தவர். இவர் 2016 முதல் 2022ம் ஆண்டு கால கட்டத்தில் வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்மன் அர்ஜுனன், அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்குப் பதிவு செய்தனர். இரண்டு கோடிக்கு அதிகமான சொத்துக்களை குவித்து இருப்பதாகவும் , அவருடைய வருவாயை காட்டிலும் 71 சதவீதம் அதிகம் என்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கிட்டு உள்ளதாக தெரிகிறது. கோவையில் இன்று காலை முதலே அம்மனுக்கு அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதை கண்டித்து எம்எல்ஏவின் ஆதரவாளர்களும், அவரது வீடு முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை