இன்ப அதிர்ச்சி கொடுத்த அம்பானி குடும்பம் ! | Anant Ambani Gift | Audemars Piguet Watches
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் ஜூலை 12ல் நடந்தது. உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வந்து வாழ்த்தினர். திருமணத்தில் ஆனந்த் அம்பானியின் மாப்பிள்ளை தோழர்களாக இருந்த ஷாரூக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு 2 கோடி மதிப்புள்ள வாட்ச்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி உள்ளார். தங்கத்திலான இந்த வாட்சை குரூப்பாக 10 பேர் அணிந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுவிஸ் நாட்டின் ஆடிமார்ஸ் பிக்கே (Audemars Piguet) நிறுவனத்தின் ராயல் ஓக் வகையை சேர்ந்த லிமிடெட் எடிஷனான இந்த வாட்சின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 8 லட்சத்து 79 ஆயிரம். ஒட்டு மொத்தமாக 25 வாட்ச்சுகளே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. வாட்சில் நேரம் பார்ப்பது மட்டும் இல்லாமல் காலநிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.