உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவறாக வழிநடத்தப்படும் ராமதாஸ்;அன்புமணி வாதம் | Anbumani | PMK Case | Ramadoss Case | Supreme Court

தவறாக வழிநடத்தப்படும் ராமதாஸ்;அன்புமணி வாதம் | Anbumani | PMK Case | Ramadoss Case | Supreme Court

பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி இருந்தது. அன்புமணி போலியான ஆவணங்களை தாக்கல் செய்து கொடுத்த விண்ணப்பத்தை ஏற்று, தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்திருக்கிறது. தேர்தல் கமிஷனின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு செய்திருந்தார். ஏற்கனவே இதே கோரிக்கை தொடர்பான விவகாரம் சென்னை உரிமையியல் கோர்ட்டில் தொடரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய ஐகோர்ட் ராமதாசின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சென்ற வாரம் ராமதாஸ் மேல்முறையீடு செய்திருந்தார்; மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக் ஷி அமர்வில் நேற்று நடந்தது. அப்போது, அன்புமணி தரப்பில் ஆஜரான வக்கீல் மீனாட்சி அரோரா, இந்த வழக்கில் விசாரிக்க வேண்டியது ஒன்றுமில்லை.

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை