/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிலை திறப்பில் சம்பவம் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி | Andhra Pradesh | Chandrababu Naidu
சிலை திறப்பில் சம்பவம் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி | Andhra Pradesh | Chandrababu Naidu
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடிப்பற்று கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி பாப்பண்ண கவுடு சிலை திறப்பு விழா நடந்தது. விழா நடந்த இடத்தில் டிஜிட்டல் பேனர்களை 5 தொழிலாளர்கள் கட்டி கொண்டிருந்தனர். அப்போது, மேலே சென்ற மின்கம்பியில் பிளக்ஸ் பேனர் உரசியது. பேனரை பிடித்துக் கொண்டிருந்த 5 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில், 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். ஒரு தொழிலாளி பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நவ 04, 2024