/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தலைவர் கிளம்பிட்டாரு! மேடையில் சூடான எம்எல்ஏ | Andipatti DMK Campaign | MLA Maharajan Outburst
தலைவர் கிளம்பிட்டாரு! மேடையில் சூடான எம்எல்ஏ | Andipatti DMK Campaign | MLA Maharajan Outburst
தேனி, ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி விலக்கு பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிக அளவில் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் மேடையில் ஏறி மைக்கில் போலீசை விளாசினார். இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே வாகனங்களை நிறுத்திட்டீங்க. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு வர முடியல. இரண்டு கிலோமீட்டருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடந்து வர முடியாது. வாகனத்தை உள்ளே அனுப்பிவிடுங்கள் என ஆவேசமாக பேசினார்.
ஏப் 18, 2026