விதி மீறிய கமிஷனர் மீது ஆக் ஷன் எடுக்க பாமக வழக்கு | anna University | student case | pmk petition
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அதிமுக, பாமக பாஜ, நாதக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் நடத்த அனுமதி கோரி பாமக சார்பில் விண்ணப்பித்த போது கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் பாமக நிர்வாகி வழக்கறிஞர் பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் கடந்த வாரம் விசாரித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. கட்சிகள் உண்மையான அக்கறையுடன் போராட்டம் நடத்தவில்லை என கூறிய நீதிபதி, போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த விவகாரத்தில் கோர்ட் தலையிடாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். இந்தச் சூழலில் கவர்னர் ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கியதை சுட்டிக் காட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.