உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக தலையில் அண்ணாமலை இறக்கிய பேரிடி Anna university case | Annamalai vs DMK | Shame on you stalin

திமுக தலையில் அண்ணாமலை இறக்கிய பேரிடி Anna university case | Annamalai vs DMK | Shame on you stalin

சென்னை அண்ணாமலை பல்கலை வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கிப் போட்டுள்ளது. 23ம் தேதி இரவு 7:45 மணி அளவில் காதலனுடன் பல்கலை வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த மாணவியை, பல்கலை பக்கத்தில் பிரியாணி கடை வைத்திருக்கும் ஞானசேகரன் என்பவன் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தான். அவனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புள்ள இன்னொருத்தனை தேடி வருகின்றனர். ஞானசேகரன் சைதை பகுதி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் என்ற அதிர்ச்சி தகவலை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோருடன் அவன் இருக்கும் போட்டோக்களையும் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எப்ஐஆர் காப்பி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை