/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 3 பெண் ஐபிஎஸ் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட் | Anna university student | 25 Lakhs
3 பெண் ஐபிஎஸ் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட் | Anna university student | 25 Lakhs
சென்னை அண்ணா பல்கலை வளாகத்திற்குள் கடந்த 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரை வைத்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கி இருக்கிறது. சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் குறைகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதித்த பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் FIR அறிக்கை போலீசாரால் வெளியிட்டிருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
டிச 28, 2024