/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுகவினர் அமைதிக்கு காரணம் என்ன? Annamalai | BJP | Edappady Palanisamy | ADMK
அதிமுகவினர் அமைதிக்கு காரணம் என்ன? Annamalai | BJP | Edappady Palanisamy | ADMK
சென்னையில் கடந்த 25ம் தேதி பா.ஜ பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அண்ணாமலை பேசும்போது, என்னை பற்றியும், கட்சி குறித்தும், எடப்பாடி பழனிசாமி சில கருத்துக்களை கூறியுள்ளார். அதற்கு நான் கருத்து சொல்ல வேண்டும். தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பிடித்தவர் பழனிசாமி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடத்திய கட்சியை, இன்று கிணற்று தவளைகள் வழி நடத்தி கொண்டிருக்கின்றன என்று பேசியதுடன், பழனிசாமியை தற்குறி எனக் கூறி கடுமையாக வசைபாடினார். அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆக 30, 2024