பாஜவிடமே சீட்டை திருப்பி கொடுத்த கட்சி-அதிர்ச்சி Annamalai | BJP Candidate list | PNK | TN Election
நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியானது. ஒரே கட்டமாக 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தமிழிசை, வானதி, எல்.முருகன், ராம சீனிவாசன் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை போட்டியிடவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் சீட் வழங்கப்படவில்லை. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, பாஜவிடம் பறிபோக இருந்த ஒரு சீட்டை அந்த கட்சி காப்பாற்றி இருக்கிறது. அதாவது, கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்று தொகுதிகளை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் கேட்டு இருந்தார்; ஆனால் அவர், தர மறுத்து விட்டார். இரண்டு சீட் ஓகே. அதிமுக தங்கள் வசம் இருந்து ஒரு சீட் தரும். இன்னொரு சீட்டை பாஜவிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதையடுத்து தான் மதுரை மத்திய தொகுதிக்கு சுந்தர் சி பெயரை அறிவித்தார் ஏசி சண்முகம். அங்கு அவர் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். இன்னொரு தொகுதிக்காக பாஜவிடம் பேசினார். தாமரை சின்னத்தில் 2வது வேட்பாளர் களம் இறங்குவார் என்று அறிவித்து இருந்தார். ஆனால் நேற்று வெளியான லிஸ்ட்டில் புதிய நீதி கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி கூட்டணி கட்சியான தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறனுக்கு மட்டும் திருப்பத்துாரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரும் பாஜ வேட்பாளராகவே களம் இறங்குகிறார். மற்றபடி புதிய நீதி கட்சிக்கு சீட் வழங்கப்படவில்லை. இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏ.சி.சண்முகம் கூறுகையில், எங்களுக்கு சவாலான தொகுதியை கொடுத்தனர். அதனால், பா.ஜ.,விடமே தொகுதியை திருப்பி கொடுத்து விட்டோம். குறிப்பிட்ட அந்த தொகுதியில் பா.ஜ., நல்ல வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளரையும் நான் தான் பரிந்துரைத்தேன் என்றார். #BJPCandidateList #Annamalai #TNElection2026 #TNBJP #TNPolitics #BJPIndia #Election2025 #TamilNadu #BJPLeadership #PollCandidates #TNElection #TamilNaduBJP #Annamalai2026 #StateElections #PoliticalCampaign #BJPManifesto #NGTUpcomingElections #IndianPolitics #BJPInTN #ElectionUpdates