உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அப்பாவிகளை பலிகடா ஆக்கிவிட்டு அந்த நெருப்பில் குளிர்காயாதீங்க | Annamalai | State president | BJP |

அப்பாவிகளை பலிகடா ஆக்கிவிட்டு அந்த நெருப்பில் குளிர்காயாதீங்க | Annamalai | State president | BJP |

பெருகிவரும் போதைப் பொருள் புழக்கம், பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என தனது ஒட்டு மொத்த நிர்வாக தோல்வியையும் மடைமாற்ற, இங்கு பல ஆண்டு காலமாக செய்து வரும் அதே மொழி அரசியலை திமுக மீண்டும் எடுத்திருப்பதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தேசிய மும்மொழிக் கொள்கையை, இந்தி திணிப்பு என்று பொய் கூறி, சில திமுகவினர் ஹிந்தி எழுத்துக்களை அழிக்கிறோம் என்று கருப்பு பெயின்ட் டப்பாவை தூக்கிக் கொண்டுச் சுற்றி திரிகின்றனர். அவர்கள் அப்படியே அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம். மக்களை குழப்புவதையே தொழிலாக கொண்ட திமுகவினர், தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நியாயம், தமிழக மக்களுக்கு ஒரு நியாயம் என்றே எப்போதும் நடந்து கொள்வார்கள். தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டு, அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு எதிரான தவறான கருத்துக்களையும், பிரச்சாரத்தையும் பரப்புவார்கள். இதுதான் ஒவ்வொரு விஷயத்திலும், திமுகவின் முரணான நிலைப்பாடு. இதனை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்தித் திணிப்பு என்ற மாயையை உருவாக்கி, அதன் பின் ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தி.மு.கவில் மேல்மட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் யாராவது ஒருவர் மொழிப் போர் தியாகி ஆகியிருக்கிறாரா? எத்தனை நாட்கள்தான் இப்படி அப்பாவிகளின் உணர்வைத் தூண்டி பலிகடா ஆக்கிவிட்டு, அந்த நெருப்பில் குளிர்காய்வீர்கள்? திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஓடி ஒளியாமல், எங்களின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ