நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி வளர்ச்சி தொடரும் | Annamalai | BJP | Amit shah | Nainar Nagenth
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை முன்னிலையில் பாஜ - அதிமுக கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். 2024 பார்லிமென்ட் தேர்தலில் தனி தனியாக போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்த இரு தரப்பும், மீண்டும் கூட்டணி அமைந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளன. சென்னை வருகையின்போது பாஜ நிர்வாகிகளுக்கு ஊக்கம் கொடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமை, தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் உறுதியான வழிகாட்டுதலில் எல்லா நேரத்திலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் விலைமதிப்பற்ற ஆதரவால் தமிழக பாஜ எப்போதும் மாநில மற்றும் நாட்டின் நலனை முதன்மையாக கொண்டுள்ளது. நமது மூத்த தலைவர்கள் களத்தில் சிங்கங்களைப் போல் போராடி, கொடூரமான, தீய திமுகவை அன்றாட பிரச்சினை அடிப்படையில் எதிர்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் ஒரு தலைமுறையில் ஒரு முறை வரும் தலைவரான பிரதமர் மோடி வழங்கும் நல்லாட்சி, வளர்ந்த பாரதம் 2047 என்ற தெளிவான இலக்கை நிறைவேற்ற மட்டுமே. பாஜ எனக்கு தகுதியானதை விட அதிகமாகவே வழங்கியுள்ளது. அதற்கு ஈடாக இன்னும் கடினமாக உழைப்பதே ஒரே வழி. ஒரு பெருமைமிக்க பாஜ உறுப்பினராக, நமது நாட்டுக்கும், தமிழகத்தின் அன்பான மக்களுக்கும் சேவை செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாஜ மாநில தலைவராக பரிந்துரைக்கப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை, அனுபவத்தால் கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சேவை பயணத்தை தொடரும். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்களையும் நிறைவேற்றும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.