உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவினர் பள்ளிகளில்தான் இந்தி திணிப்பு நடக்கிறது annamalai k. bjp cm mk stalin three language for

திமுகவினர் பள்ளிகளில்தான் இந்தி திணிப்பு நடக்கிறது annamalai k. bjp cm mk stalin three language for

இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது என்றார். தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தின் இருமொழி கொள்கை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தரமாட்டோம் என்றாலும், பணமே வேண்டாம்; மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். இது பண பிரச்னை அல்ல. நமது இனப்பிரச்னை.. இந்தி திணிப்பு என்பது பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால் தான், இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும், முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை. முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான். இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர். இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 - 25 நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26 நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்தது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை