23 லட்சம் விவசாயிகள் போலி பயனாளிகளா? | Annamalai| PM Kisan| PM modi| farmers
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை 2019 முதல் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில், தமிழக விவசாயிகளுக்கு இதுவரை 10,435 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கி உள்ளது. தமிழகத்தில் 7 லட்சம் போலியான விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்த்து பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்தது 2020-21ல் கண்டறியப்பட்டது. அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. 2020-21ம் ஆண்டில் சுமார் 44 லட்சம் விவசாயிகள் கிசான் திட்டத்தில் பயனடைந்தனர். அதன் பின் பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 21 லட்சம் பயணிகள் மட்டுமே உள்ளனர். 23 லட்சம் பயனாளிகள் திமுக அரசால் விவசாய உதவித்தொகை பெறுவதில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.