உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கொள்ளை போனது கோபாலபுரம் சொத்துகள் அல்ல Annamalai| BJP| ED| Quarry probe| mk stalin

கொள்ளை போனது கோபாலபுரம் சொத்துகள் அல்ல Annamalai| BJP| ED| Quarry probe| mk stalin

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. அரசு அதிகாரிகள் துணையோடு, ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகவும், அது தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை கூறியிருந்தது. அது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. அதில், கடந்த ஓராண்டில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 23.64 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக 5 மாவட்டங்களில் 190 ஹெக்டேர் அளவில் மணல் அள்ள அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சட்டவிரோதமாக 987 ஹெக்டேரில் மணல் அள்ளப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை