தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு சட்டத்தை திருத்துவது சரியா? | Annamalai | Stalin | Kallakurichi
தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; கடந்த ஆண்டு 23 பேர் இறக்க காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்தீர்கள். ₹2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள். இத்தனையும் செய்து விட்டு, தமிழக மதுவிலக்கு சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக இல்லை என கூறி, மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை கூறியுள்ளார்.