உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? அண்ணாமலை அட்டாக் | Annamalai | MK Stalin | DMK

யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? அண்ணாமலை அட்டாக் | Annamalai | MK Stalin | DMK

பஸ்ச கூட வாங்க முடியல! இதுல விமான நிலையமா? இரண்டு ஆண்டுகளில் பஸ் கூட வாங்காத திமுக, இப்போது விமான நிலையம் அமைக்க இருப்பதாக சொல்கிறது. இது ஆகச்சிறந்த நகைச்சுவை என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கடந்த 2022 ஏப்ரல் 4ல் திமுக எம்பி வில்சன் ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்டார். அன்றைய மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெளிவாக பதிலளித்துள்ளார். தமிழக அரசு டி.ஏ.ஏ.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்தி பயன்படுத்தலாம் என கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை