ஆயிரக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்க்கவும் திட்டம் | Annamalai | BJP | Coimbatore Manadu
தமிழகம் திரும்பியதும் பிரமாண்ட கட்சி மாநாடு அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் 3 மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 27ல் லண்டன் புறப்பட்டு சென்றார். படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 23ல் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். அவர் வந்தவுடன் கட்சியில் பெரிய மாற்றம் இருக்கும் என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். நவம்பர் 23ல் அவர் வருகைக்கான ஏற்பாடுகள் உறுதியாகிவிட்டாலும் மேலும் சில நாட்கள் லண்டனிலேயே தங்கி இருந்து படிப்புக்கான சான்றிதழைப் பெற்று திரும்புங்கள் என குடும்பத்தினர் வலியுறுத்துவதால் அதுகுறித்த யோசனையில் உள்ளார் அண்ணாமலை. லண்டன் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியதும் கட்சிக்காக கோவையில் மிகப்பெரிய மாநாடு நடத்தி அரசியல் களத்தில் கட்சியை உயிரோட்டம் மிக்கதாக ஆக்கும் முடிவில் அண்ணாமலை இருப்பதாகக் கூறப்படுகிறது.