/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காவல்துறை மீது கை வைத்தால் சும்மா விடுவதா?: அண்ணாமலை annamalai | mk stalin | dmk | bjp | tn police
காவல்துறை மீது கை வைத்தால் சும்மா விடுவதா?: அண்ணாமலை annamalai | mk stalin | dmk | bjp | tn police
வேளச்சேரியில் சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவுக்காக, போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த காவலர் காமராஜ் என்பவரை மது போதையில் இருந்த திமுகவினர் தாக்கிய செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. போலீசை தாக்கும் அளவுக்கு திமுகவினருக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் என்பது தொடர்கதை ஆகி இருக்கிறது. தற்போதும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏப் 14, 2025