/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எனக்கு கடன் தந்தது என் மகன் என்பது எனக்கு தெரியாது! | Annamalai | Defamation Case | TR Balu | DMK MP
எனக்கு கடன் தந்தது என் மகன் என்பது எனக்கு தெரியாது! | Annamalai | Defamation Case | TR Balu | DMK MP
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது திமுக எம்பி பாலு தொடர்ந்த அவதுாறு வழக்கு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணைக்கு பாலு பதில் அளித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, நான் மத்திய அமைச்சராக இருந்த போது 10 பெரிய கப்பல்களை வாங்கியதாக பேட்டி அளித்து உள்ளார். இது தொடர்பாக 2014, ஏப்.,4ல், பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக கேள்வி எழுப்புகிறீர்கள். இந்த வழக்கிற்கும், நீங்கள் கேட்கும் கேள்விக்கும் சம்மந்தம் இல்லை. என்னை பற்றி அழகிரி அப்படி சொல்லி இருப்பதாக, நீங்கள் கூறுவது உள்நோக்கத்துடன் சொல்வதாகும்.
பிப் 17, 2026