20000 பேர் ஊடுருவல்? அர்ஜுன் சம்பத் அதிர்ச்சி தகவல் | Arjun Sampath | Rohingya
நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் பற்றிய கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து இங்கேயே தங்கியுள்ள வங்கதேசத்தினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் போர்வையில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஊடுருவுகின்றனர். வடமாநிலத்தவர் போல், உருவ ஒற்றுமையுடன் இருக்கும் வங்கதேசத்தினரை கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கோவையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், மளிகைக்கடைகள், துணிக்கடைகளிலும் வடமாநிலத்தவர் பணிபுரிகின்றனர். தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த தகவல்களை, தொழிலாளர் நலத்துறையில் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்கின்றன.