ஆம்ஸ்ட்ராங் சம்பவம் பின்னால் இருக்கும் ரத்த சரித்திரம் | Arcot Suresh vs Armstrong | BSP Armstrong
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையால் ஆடிப்போய் இருக்கிறது தலைநகர் சென்னை. பெரம்பூரில் புதிதாக கட்டி வந்த வீடு முன்பு நேற்று இரவு 7 மணி அளவில் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்தது ஒரு கும்பல். செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி புன்னை பாலு, அவரது மைத்துனர் அருள், ரவுடியும் ஆட்டோ டிரைவருமான திருமலை உட்பட 8 பேர் போலீசில் சிக்கினர். போலீசின் முதல் கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் எந்த இடத்திலும் ஆம்ஸ்ட்ராங் பெயர் இல்லை. பிறகு ஏன் அவரை புன்னை பாலு டீம் கொலை செய்தது என்று கேள்வி வரலாம். அதற்கெல்லாம் இப்போது விடை காணலாம். ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி இன்று, நேற்று துவங்கியது அல்ல. இது 15 ஆண்டு ரத்த சரித்திரத்தின் நீட்சி. அப்போது சென்னையை கலக்கி கொண்டிருந்தவர் பிரபல ரவுடி நாயுடு என்னற சின்னா. 2010ம் ஆண்டு அவரை சுரேசும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பூந்தமல்லி கோர்ட்டில் வைத்து படுகொலை செய்தனர்.