ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்திருப்பார்: ஆதரவாளர்கள் | Armstrong | Perambur | Beretta 3032 Tomcat Inox
ஆம்ஸ்ட்ராங் அடித்தட்டு மக்களுக்காக பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார். அவர்களுக்காக போராடும்போது அதிகாரமிக்க பலரது எதிர்ப்பை சம்பாதித்தார். வடசென்னை மக்களுக்காக ரவுடிகளுடனும் மோத வேண்டி இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக முக்கிய கட்சிகளை எதிர்த்து தேர்தலை தனித்து சந்தித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவருக்கென தனி செல்வாக்கு இருக்கிறது, அதனை பலர் விரும்பவில்லை. அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. இதனால் பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து இருந்தார். அது இத்தாலியில் இருந்து வாங்கப்பட்ட Beretta 3032 Tomcat Inox என்ற ரக துப்பாக்கி ஆகும். அதன் விலை 20 லட்சம் ரூபாய், 400 கிராம் எடை கொண்டது, 9 ரவுண்டுகள் வரை சுடலாம். எங்கு சென்றாலும் துப்பாக்கியுடன்தான் ஆம்ஸ்ட்ராங் செல்வார். லோக்சபா தேர்தலின்போது, தேர்தல் ஆணைய விதிகளின் படி, துப்பாக்கியை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன், கடந்த மாதம் 13ம் தேதி துப்பாக்கியை திரும்ப பெற்றுக் கொண்டார். அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எப்போது வெளியல் சென்றாலும் துப்பாக்கியுடன் செல்வார். நேற்று வீட்டருகே தானே என நினைத்து துப்பாக்கியை எடுத்துச் செல்லவில்லை. ஒருவேளை அவரது துப்பாக்கி கையில் இருந்திருந்தால் தன்னை வெட்ட வந்தவர்களை சுட்டு தள்ளியிருப்பார். இன்று எங்களுடன் இருந்திருப்பார் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.