உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தப்பியோடியவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி?

தப்பியோடியவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி?

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுடன்டரில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். சரணடைந்தவர் ஏன் தப்பியோட வேண்டும்? இது போலி என்கவுன்டர். கைவிலங்கு போடாமல் இருப்பது ஏன் என பல கேள்விகள் கேட்டுள்ளனர். இச்சூழலில் என்கவுன்டர் எப்படி நடந்தது என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய குன்றத்தூர் திருவேங்கடம் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணைக்காக அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இதில் திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலை தவிர வேறு 2 கொலை வழக்குகள் வழிப்பறி உட்பட 5 வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற, மணலியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை