/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விடிய விடிய நடந்த விசாரணையில் அஞ்சலை சொன்னது என்ன? | Armstrong | Anjalai
விடிய விடிய நடந்த விசாரணையில் அஞ்சலை சொன்னது என்ன? | Armstrong | Anjalai
சென்னை பெரம்பூரில் ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், புதிதாக கட்டப்பட்டு வரும் அவரது வீட்டுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது, திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கில், மலர்க்கொடி, சேகர், ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 20, 2024