/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவுக்கு எதிராக காங் எம்பி சரமாரி குற்றச்சாட்டு-பரபரப்பு | armstrong case | DMK vs TN Congress
திமுகவுக்கு எதிராக காங் எம்பி சரமாரி குற்றச்சாட்டு-பரபரப்பு | armstrong case | DMK vs TN Congress
வன்மையா கண்டிக்கிறேன் திமுகவுக்கு காங் எம்பி ஷாக் பரபரப்பு பேட்டி ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் போலீஸ் கஸ்டடியில் இருந்த போது என்கவுன்டர் செய்யப்பட்டார். என்கவுன்டர் பற்றி அதிமுக, பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகம் கிளப்பின. இப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளும் என்கவுன்டருக்கு எதிராக கிளம்பி இருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. என்கவுன்டர் விவகாரத்தில் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி, என்கவுன்டர் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விளாசினார்.
ஜூலை 17, 2024