உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / என்ன நடக்க வேண்டுமோ அது இன்று நடந்து விட்டது; | Anna Hazare | Social Activist | Arvind Kejriwal

என்ன நடக்க வேண்டுமோ அது இன்று நடந்து விட்டது; | Anna Hazare | Social Activist | Arvind Kejriwal

சொல் பேச்சு கேட்காதவர் கெஜ்ரிவாலை விளாசிய ஹசாரே மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச்சில் கைதானார். கடந்த 13ம் தேதி சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. சிறையை விட்டு வெளியே வந்த பிறகு நேற்று முதல் முறையாக கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முன் அவர் பேசினார். 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் நான் மக்களிடம் செல்வேன். கெஜ்ரிவால் நேர்மையானவர் என மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். புதிய முதல்வராக இன்னொருவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என கெஜ்ரிவால் கூறினார். அவரது பேச்சு ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. கெஜ்ரிவால் நாடகமாடுகிறார் என காங்கிரசும், பாரதிய ஜனதாவும் விமர்சித்தன.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ