தனியாக பதவியேற்கும் ஆதிஷி: காரணம் இதுதான் | Governor V.K.Saxena | Atishi | Swearing ceremony | Delhi
டில்லி முதல்வராக ஆதிஷி பதவியேற்பது எப்போது? முடிவு செய்த கவர்னர் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 6 மாதங்களாக சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு நீண்ட இழுபறிக்கு பின் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. ஜாமின் கொடுத்தாலும் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியாத அளவு கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை விதித்தது. இதை உணர்ந்த கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய முதல்வராக கல்வி அமைச்சர் அதிஷி மர்லினாவை கைகாட்டினார். நேற்று மாலை கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்த கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வழங்கினார். ஆனால் அந்த கடிதம் கவர்னருக்கு பதிலாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்டது தெரியவந்துள்ளது. நான், எனது அமைச்சர் குழுவுடன் சேர்ந்து, ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கெஜ்ரிவாலுக்கும் கவர்னருக்கும் இடையே உள்ள கசப்பான உறவை காட்டுகிறது. கவர்னரை நேரில் சந்தித்து ராஜினாமா செய்தாலும், கெஜ்ரிவால் அவரை கண்டுகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.