உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாக் மீது 36 மணி நேரத்தில் இந்தியா அட்டாக்: மந்திரி பீதி | Pahalgam attack | india vs pakistan

பாக் மீது 36 மணி நேரத்தில் இந்தியா அட்டாக்: மந்திரி பீதி | Pahalgam attack | india vs pakistan

24 முதல் 36 மணி நேரத்தில் அட்டாக் பாகிஸ்தானில் ஒரே கதறல் சத்தம் நாள் குறித்தது இந்தியா பதறும் பாக் அமைச்சர் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இது தொடர்பாக ராணுவ அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தளபதிகளுடன் நேற்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனால் எந்த நேரத்திலும் இந்தியாவின் தாக்குதல் இருக்கும் என்று பாகிஸ்தான் உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கிறது. அந்த நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருக்கும் அட்டாவுல்லா தரார் Attaulla Tarar வெளிப்படையாக தனது குமுறலை கொட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியது: பஹல்காம் சம்பவத்தை சாக்குப்போக்காக பயன்படுத்திக்கொண்டு இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையின் நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் ஏற்படும் எந்தவொரு விளைவுக்கும் இந்தியா தான் பொறுப்பு. உள்ளே புகுந்து அடித்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி