இந்திய முஸ்லிம்கள் பற்றி பேசி மூக்கு உடைந்த ஈரான் மத தலைவர் | Ayatollah Ali Khamenei | India vs Iran
இஸ்லாத்தின் எதிரி இந்தியா ஈரான் மத தலைவர் குண்டு! இந்தியா கொடுத்த காட்டமான ரிப்ளே! யூதர்களின் நாடான இஸ்ரேலும் முஸ்லிம்கள் வசிக்கும் பாலஸ்தீன் நாடும் போரில் ஈடுபட்டுள்ளன. பாலஸ்தீனை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் மரணம் அடைந்துள்ளனர். போரில் பாலஸ்தீனுக்கு ஆதரவு காட்டும் முஸ்லிம் நாடான ஈரான் மத தலைவர் அயதுல்லா அலி காமெனி, இஸ்ரேலை கண்டிக்கும் போக்கில் இந்தியாவையும் சாடி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: இஸ்லாத்தின் எதிரிகள் தொடர்ந்து நம்முடைய அடையாளத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் காசா, மியான்மார், இந்தியா உட்பட எங்கு நடந்தாலும் சரி. முஸ்லிம்களின் வேதனைகளை கண்டுகொள்ளாமல் இருந்தால், நாம முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று கூறி முஸ்லிம்களை தூண்டி விட்டுள்ளார். இந்தியாவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.