உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்: கமெனி அறிவிப்பு |Israel vs Hezbollah | Ayatollah Ali Khamenei | N

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்: கமெனி அறிவிப்பு |Israel vs Hezbollah | Ayatollah Ali Khamenei | N

ரஷ்ய துப்பாக்கியுடன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஈரான் தலைவர் ஆவேசம் இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் கடந்தாண்டு அக்டோபர் முதல் நடந்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் பதில் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ஈரான், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை துவங்கியது. கடந்த 1‍ம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை வீசி தாக்கியது. பெரும்பாலான ஏவுகணைகளை தடுத்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது. அதே சமயம், தங்கள் ஏவுகணைகள் சரியான இலக்கை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவித்தது. இந்த சூழலில் தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி (Ayatollah Ali Khamenei )தெரிவித்துள்ளார்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !