உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2 வழக்கிலும் ரூட் கிளியர் ஜாமினில் வருகிறார் கெஜ்ரி Bail To Delhi CM| Arvind Kejriwal | CBI Case

2 வழக்கிலும் ரூட் கிளியர் ஜாமினில் வருகிறார் கெஜ்ரி Bail To Delhi CM| Arvind Kejriwal | CBI Case

டெல்லி அரசின் மதுக்கொள்ளை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 11ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அவர் முறையிட்டார். லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. மீண்டும் ஜூன் 2ல் திகார் சிறைக்கு திரும்பினார். அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், ஜாமின் கேட்டும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். ஜூலை 12ல் அவருக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது. ஆனால், ஜூலை 26ல் இதே வழக்கில் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததால் அவரால் ஜாமினில் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. சிபிஐ கைதை எதிர்த்தும், ஜாமின் கேட்டும், டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு செய்தார். ஆகஸ்ட் 5ல் அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்தது. கடந்த 5ம் தேதி வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கெஜ்ரிவாலை கைது செய்ததில் குற்றவியல் சட்ட நடைமுறைகளை சிபிஐ பின்பற்ற தவறிவிட்டதாக கூறிய வாதிட்டத்தை நீதிபதி சூர்ய காந்த் ஏற்கவில்லை. சட்டப்படிதான் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். சிபிஐ கைது செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நீதிபதி உஜ்ஜல் புயான் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ கைது செய்துள்ளதாக தெரிகிறது. தாமதமான இந்த கைது நியாயமற்றது என நீதிபதி புயான் கூறினார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !