உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவில் சீட் கிடைக்காததால் விரக்தி! | Balakrishna Reddy | ADMK | BJP | Krishnagiri

அதிமுகவில் சீட் கிடைக்காததால் விரக்தி! | Balakrishna Reddy | ADMK | BJP | Krishnagiri

பாஜவில் ஐக்கியமாக முடிவு செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்? கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜீமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. ரியல் எஸ்டேட், செங்கல் சூளை தொழில் செய்து வந்த இவர், 2001ல், அ.தி.மு.க. உறுப்பினரானார். பின், 2006ல் எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலராக பதவி பெற்றார். அதன் தொடர்ச்சியாக 2010ல், ஓசூர், அ.தி.மு.க. ஒன்றிய செயலராகி, 2011ல், ஓசூர் நகராட்சி தலைவரானார். அதன்பின், 2016ல் ஓசூர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், ஜெயலலிதா அமைச்சரவையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரானார். முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 1998ல், கள்ளச்சாராயத்திற்கு எதிராக, ஓசூர் அருகே பாகலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் ஜீப் எரிக்கப்பட்டது. இதில் 108 பேர் மீது வழக்கு பதியப்பட்டதில், பாலகிருஷ்ணா ரெட்டியும், 71வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. பின் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2019 ஜனவரி மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் அவருடைய எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவி பறிபோனது.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ